சாமான்யன்
Friday, March 19, 2004
ஒன்னுக்கு போக தொட்டி கட்டுனாங்களாம். அதுவும் இந்த டிசைன்ல...
இதுவும் அது மாதிரி தான்.... ஆனா பொழுது போகலன்னா இது மாதிரி ஏதாவது படிக்கலாம்..
எனக்கொரு வருத்தமுண்டு. சில செல்லாக்காசுகள் பினாத்துவதும், அதை பெரிதென்று மதித்து சில வீணாப்போன பத்திரிக்கைகள் வேறு விஷயமே இல்லாத மாதிரி அச்சேற்றுவதும் "காலங்காலம்" சங்கதி...
"எல்லாம் தெரிந்த" சிலரும் கூட அதை ஒரு அலசல் ஆக எடுத்துக் கொண்டால் அந்த தொந்திகளுக்கு நாம் கொடுத்த முக்கியத்துவம் ஆகாதோ.. விடுங்க சாமி. வேறு ஏதாவது ஆகுற காரியமா அலசுங்க...
Monday, March 15, 2004
ஒரே குழப்பம்...
தெளிவு தேவை
சிந்தனை தறி கெட்டோடுது
என் முடிவுகளை எனக்காக
யாராவது எடுத்தால்
தேவலாம் போல் இருக்கிறது
Wednesday, March 10, 2004
Pieces of April என்று ஒரு படம் பார்த்தோம். சும்மா சொல்லக் கூடாது. கலாச்சாரங்கள் வேறுபட்டாலும், உணர்ச்சிகளில் வேறுபாடு இல்லை என்பதை ஒரு நையாண்டித்தனமாக சொல்லியிருக்கிறார் Peter Hedges . அம்மாவுக்கு புற்று நோய். இதுவே குடு ம்பத்தின் கடைசி "get-together " ஆக இருக்கக் கூடு ம் என்பதால் அனைவரும் கிளம்பி நியூயார்க்கில் இருக்கும் "ஏப்ரல்" வீட்டு க்கு செல்கிறார்கள். ஆசாபாசங்கள் அமெரிக்கக் குடு ம்பங்களிலும் உண்டு . ஆனால் அதை வெளிப்படு த்தும் விதம் தான் வேறு.